மீல் மேக்கர் வைத்து கறி வறுவலை மிஞ்சும் சுவையில் ஓர் அருமையான ரெசிபி!!

Photo of author

By Divya

மீல் மேக்கர் வைத்து கறி வறுவலை மிஞ்சும் சுவையில் ஓர் அருமையான ரெசிபி!!

Divya

சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படும் மீல் மேக்கரை வைத்து அசைவ சுவையை மிஞ்சும் ஒரு அருமையான ரெசிபி செய்வது குறித்து இங்கு சொல்லப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)மீல்மேக்கர் – அரை கப்
2)சின்ன வெங்காயம் – 10
3)தக்காளி – ஒன்று
4)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
5)கடுகு – அரை தேக்கரண்டி
6)கறிவேப்பிலை – ஒரு கொத்து
7)பூண்டு – 10 பல்
8)இஞ்சி – ஒரு துண்டு
9)பெருஞ்சீரகம் – கால் தேக்கரண்டி
10)சீரகம் – கால் தேக்கரண்டி
11)கரு மிளகு – கால் தேக்கரண்டி
12)வர கொத்தமல்லி – அரை தேக்கரண்டி
13)பட்டை – ஒரு துண்டு
14)கிராம்பு – இரண்டு
15)உப்பு – தேவையான அளவு
16)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
17)கொத்தமல்லி தழை – சிறிதளவு
18)கறிவேப்பிலை – ஒரு கொத்து
19)வர மிளகாய் – இரண்டு

செய்முறை விளக்கம்:-

முதலில் இஞ்சி,பூண்டை தோல் உரித்துவிட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு தக்காளி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.அதன் பிறகு அடுப்பில் வாணலி வைத்து கொத்தமல்லி விதை,சீரகம்,சோம்பு,பட்டை,மிளகு,கிராம்பு,வர மிளகாய் ஆகியவற்றை போட்டு வறுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு அடுப்பில் வாணலி வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றுங்கள்.

பிறகு கடுகு போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை போட வேண்டும்.அடுத்து நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம்,தக்காளி போட்டு வதக்க வேண்டும்.

அடுத்து அரைத்த இஞ்சி,பூண்டு விழுதை அதில் போட்டு வதக்கி எடுக்க வேண்டும்.அதற்கு அடுத்து மீல் மேக்கரை சூடு நீரில் போட்டு ஊறவைத்து வதங்கி கொண்டிருக்கும் கலவையில் போட வேண்டும்.

அதன் பிறகு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு வதக்க வேண்டும்.அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைக்க வேண்டும்.

நன்கு கிரேவி பதத்திற்கு வந்த பிறகு கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும்.இந்த மீல் மேக்கர் கிரேவியை சூடான சாதம்,சப்பாத்தி,பூரி,பரோட்டா,இட்லி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.