தஞ்சை மாவட்டத்தில் மண்ணில் புதையுண்ட தொழிலாளி உயிருடன் மீட்பு!
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே கழிவுநீர் தொட்டி அமைக்க சில தொழிலாளிகள் மண்ணை தோண்டியுள்ளனர். சின்னமணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் இவரது வீட்டில் கழிவுநீர் தொட்டிக்காக சிமெண்டினால் ஆன காரை ரிங் இறக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 15 அடி ஆழம் மண் தோண்டப்பட்டது.
வேலையை பேராவூரணி பூக்கொல்லையைச் சேர்ந்த சித்திரவேல் என்பவர் இந்த பணியை செய்து வந்தார். இவருடைய வயது 45 ஆகும். இந்தப் பணியில் இவர் மட்டும் செய்யாமல் இவருடன் நான்கு பேரும் கலந்து செய்து கொண்டிருந்தார்கள். 15 அடி ஆழத்துக்கு மண் தோன்றிய போது சித்திரவேல் குழிக்குள் இருந்து மண்ணை வெளியே எடுத்து மேலே இருக்கும் நபர்களுக்கு அனுப்பி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மேலே இருந்த மண் சரிந்து குழிக்குள் மல மலவென விழுந்தது. இதில் உள்ளிருந்த சித்திரவேல் மண்ணுக்குள் புதையுண்டார். பிறகு உடனடியாக அங்கு வேலை பார்த்த மற்ற தொழிலாளிகள் அனைவரும் சித்திரவேல் மீதி இருந்த மண்ணை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் அலுவலர் ராமச்சந்திரன் தலைமையிலான வீரர்கள் சுப்பையன் நீலகண்டன் ரஜினி ராஜீவ் காந்தி மகேந்திரன் ஆகியோர் கொண்ட குழுவில் விரைந்து சென்று மண்ணுக்குள் சிக்கியிருந்த சித்திரவேலை மீக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தப் பணியை சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பின் நடைபெற்று வந்தது. அதன் பிறகு சித்திரவேல் உயிருடன் நீக்கப்பட்டார். பின்னர் அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மண்ணில் நீக்கப்பட்ட சித்திரவேலுக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளார்கள். இதனால் அப்பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் பரபரப்பு நீடித்து வருகிறது.