பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளம் கிரிக்கெட் வீரர்!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் பின்னனி!! 

Photo of author

By Sakthi

பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளம் கிரிக்கெட் வீரர்!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் பின்னனி!!
நேற்று(ஜூலை26) காலை சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நபர் இளம் கிரிக்கெட் வீரர் என்று தெரியவந்துள்ளது. மேலும் அவருடைய தற்கொலைக்கு என்ன காரணம் என்பதும் தெரியவந்துள்ளது.
நேற்று(ஜூலை26) காலை கத்திப்பாரா பாலத்திலிருந்து குதித்து ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல் துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் தற்கொலை செய்து கொண்ட நபரின் பெயர் சாமுவேல் ராஜ் என்பதும் அவர் இளம் கிரிக்கெட் வீரர் என்பதும் தெரியவந்துள்ளது.
சாமுவேல் ராஜ் அவர்கள்  விருகம்பாக்கத்தில் வசித்து வருகின்றார். இந்நிலையில் சாமுவேல் ராஜ் அவர்கள் கிரிக்கெட் பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பும் பொழுது நேற்று(ஜூலை26) காலை காத்திப்பாரா பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் குதிப்பதை பார்த்த சில நபர்கள் உடனே ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறைக்கு அழைத்து தகவலை தெரிவித்தனர்.
இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக சாமுவேல் ராஜ் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சாமுவேல் ராஜ் அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறினர். இதையடுத்து சாமுவேல் ராஜ் அவர்களின் உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து சாமுவேல் ராஜ் அவர்கள் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல் துறையினர் “சாமுவேல் ராஜ் அவர்கள் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. அவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் யாருக்கும் எந்த தகவலையும் அனுப்பவில்லை.
இருப்பினும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் அணியில் தேர்வாகாத காரணத்தால் சாமுவேல் ராஜ் சில நாட்களாக சோகமாக இருந்தார் என்று சாமுவேல் ராஜ் அவர்களின் நண்பர்கள் கூறினார்கள். ஒரு வேலை டிஎன்பிஏல் கிரிக்கெட் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் கூட சாமுவேல் ராஜ் அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது என்று கூறியுள்ளனர்.
சாமுவேல் ராஜ் அவர்களின் நண்பர்கள் “தற்கொலை செய்து கொண்ட சாமுவேல் ராஜ் அவர்கள் எம்பிஏ பட்டம் முடித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் பங்கேற்று சாமுவேல் ராஜ் அவர்கள் சிறப்பாக விளையாடியுள்ளார். அது மட்டுமில்லாமல் தேசிய அளவிலான ஒரு தொடரில் தெற்கு மண்டல அணிக்கு கேப்டனாக செயல்பட்டு கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார். அது மட்டுமில்லாமல் இவர் ஒரு சிறந்த ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர்” என்று கூறியுள்ளனர்.
சாமுவேல் ராஜ் அவர்களின் மறைவு அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அனைவரும் இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் பரங்கிமலை காவல் துறையினர் சாமுவேல் ராஜ் அவர்களின் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.