மீன் வாங்கி சாப்பிட்ட இளம்பெண்!!! கை, கால்கள் செயலிழந்து உயிருக்கு போராடி வருகிறார்!!!

0
45
#image_title

மீன் வாங்கி சாப்பிட்ட இளம்பெண்!!! கை, கால்கள் செயலிழந்து உயிருக்கு போராடி வருகிறார்!!!

சந்தையில் மீன் வாங்கி சாப்பிட்ட இளம்பெண் ஒருவர் கை, கால்கள் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

முன்பு எல்லாம் உணவே மருந்து என்று முன்னோர்கள் உணவை சாப்பிட்டு வந்தனர். ஆனால் தற்போதைய காலத்தில் உணவே மருந்து என்பது மறைந்து உணவே விஷம் என்று மாறியுள்ளது. இதற்கு காரணம் நமது கவனக்குறைவு என்றுதான் கூற வேண்டும்.

கவனக்குறைவு காரணமாக உடலுக்கு எந்த உணவு நல்லது என்று தெரியாமல் கிடைக்கும் உணவுகள் அனைத்தையும் சாப்பிடுகிறோம். அதே போல உணவகங்களில் உணவு தயாரிப்பவர்களும் கவனக்குறைவு காரணமாக காலவதி ஆன பொருள்களை தூக்கி எறியாமல் அதை வைத்து உணவுகளை தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

இதனால் நம் உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படுகின்றது. இதனால் உயிரிழப்புகள் கூட நடக்கின்றது. சமீபத்தில் ஷவர்மா சாப்பிடுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழந்து விடுகின்றனர் என்று தகவல் வெளியானது.

நேற்று(செப்டம்பர்18) தபிழகத்தில் ஷவர்மா சாப்பிட்டதால் சிறுமி ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் மீன் வாங்கி சமைத்து சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயலிழந்து பெண் ஒருவர் உயிருக்கு போட்டி வரும் செய்தி அனைவருடைய மனதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா நாட்டில் கலிப்போர்னியாவில் பெண் ஒருவர் உள்ளூர் சந்தையில் மீன் ஒன்றை வாங்கி சமைத்து சாப்பிட்டுள்ளார். சில மணி நேரங்களில் அந்த பெண்ணுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அந்த பெண்ணின் கை, கால்கள் இரண்டும் செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில் அந்த பெண் கை கால்கள் செயலிழந்த நிலையில் உயிருக்கு போட்டி வருகிறார். அந்த பெண் சந்தையில் இருந்து கொடிய பாக்டீரியா உள்ள கெட்டுப் போன மீனை வாங்கியுள்ளார். இதை சரியாக வேக வைக்காமல் சமைத்து சாப்பிட்டதால் அந்த பெண்ணுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எந்த உணவாக இருந்தாலும் சரியாக வேகவைத்து சாப்பிடுவது நல்லது.