உலகக் கோப்பை தொடரின் இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் பெயர்!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

0
38
#image_title
உலகக் கோப்பை தொடரின் இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் பெயர்!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்
உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் கூடுதல் வீரராக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அவர்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 50 ஓவர் கொண்ட ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தாண்டு இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, உலகக் கோப்பையை நடத்தும் இந்தியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய பத்து அணிகள் பங்கேற்கின்றது.
உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடும் ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் நிர்வாகமும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடக் கூடிய அணியை அடுத்தடுத்து அறிவித்து வருகின்றது. இந்நிலையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணூ உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் அணியை சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.
அந்த அணியில் காயம் காரணமாக ஓய்வில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் பெயர் இடம் பெறாமல் இருந்தது.  இதையடுத்து தற்பொழுது ஜோப்ரா ஆர்ச்சர் அவர்களின் பெயரை கூடுதல் வீரராக சேர்த்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும், தேர்வு குழுத் தலைவருமான லுக் ரைட் அவர்கள் அறிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி…
ஜாஸ் பட்லர்(கேப்டன், விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, கஸ் அட்கின்சன், அடில் ரஷித், ஜோ ரூட், ஜானி பேரிஸ்டோ(விக்கெட் கீப்பர்), டேவிட் மாலன், ஹாரி ப்ரூக், சாம் கரண், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் வில்லி, மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ், ரீஸ் டாப்லி, ஜோப்ரா ஆர்ச்சர்(கூடுதல் வீரர்)