காதலிக்க மறுத்த இளம்பெண்!!கொடூரமாக தாக்கிய இளைஞர்!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

Photo of author

By Sakthi

Madurai:மதுரை அருகே காதலிக்க மறுத்த பெண்ணை  இளைஞர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெராக்ஸ் கடை ஒன்றில் கடைக்கு வந்த இளைஞர் ஒருவர்  கடையில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண்ணை தாக்கும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இந்த சம்பவம்  மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்று இருக்கிறது. அங்குள்ள ஜெராக்ஸ் கடை இளம்பெண் பணிபுரிந்து வந்து இருக்கிறார். அந்த பெண்ணை  இளைஞர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்து இருக்கிறார்.

மேலும் அந்த நபர் அந்த பெண்ணை காதலிக்கும் படி தொடர்ந்து வற்புறுத்தியிருக்கிறார். இதற்கு மறுப்பு தெரிவித்த இருக்கிறார் அந்த பெண். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர், ஜெராக்ஸ் கடைக்குள் புகுந்து அந்த பெண்ணை சரமாரியாக பெண்ணின் தலை மற்றும் முகத்தில் தாக்கி இருக்கிறார். இதனால் அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் சி.சி.டி .வி காட்சிகள் அடிப்படையில்  அந்த இளைஞர்  சித்திக் ராஜா என்றும், அவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. மேலும் போலீசார்  சித்திக் ராஜா மற்றும் அவரது நண்பனையும்  போலீசார் கைது செய்தனர்.

மேலும் போலீசாரிடம் இருந்து இந்த இளைஞர் தப்பிக்க முயன்ற இருக்கிறார். இதானால் அந்த இளைஞருக்கு  கை முறிவு ஏற்பட்டு இருக்கிறது. `