ஆதார் அட்டை இருந்தால் போதும் உடனே கடன் வாங்கலாம்!! முழு விவரம் இதோ!!
வைத்து கூட கடன் அனைத்து சேவைகளை பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டிலுள்ள அனைத்து கல்வி நிலையங்களில் சேர்வது கூட ஆதாரம் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தாலும் அங்கேயும் ஆதார் அட்டை நகல் கேட்கப்படுகிறது.
என எங்கும், எதிலும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது ஆதார் அட்டை குறித்து ஒரு அதிரடி நல்ல அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இனி ஆதார் அட்டை வைத்து நாம் கடன் பெற்றுக் கொள்ளும் வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது 22 தனியார் நிறுவனங்களில் இனி ஆதார் அட்டையை பயன்படுத்தியே நாம் கடன் பெற்றுக் கொள்ளலாம்.
கோத்ரெஜ் ஃபைனான்ஸ், அமேசான் பே (இந்தியா) பிரைவேட் லிமிடெட், ஆதித்யா பிர்லா ஹவுசிங் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ் ஃபைனான்ஸ் சொல்யூஷன்ஸ், ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ் மற்றும் மஹிந்திரா ரூரல் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் உள்ளிட்ட 22 நிதி நிறுவனங்களில் மூலம் நாம் கடன் பெற்றுக் கொள்ளலாம் ஆனால் குறிப்பிட்ட தொகை அளவு மட்டுமே கடன் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் கடனை உரிய முறையில் திருப்பி செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அனைவருக்கும் கடன் தொகை தேவைப்படுகிறது. குழந்தைகளை பள்ளிக்கூடம் சேர்க்க, செல்போன், லேப்டாப் உள்ளிட்ட புதிய பொருட்களை நாம் வாங்க, வீட்டிற்கு தேவையான ஏசி, வாஷிங் மெஷின், என வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க என பலவற்றிற்கும் நமக்கு கடன் தேவைப்படுகிறது.
அந்த கடனை வழங்குவதற்கு பல நிதி நிறுவனங்கள் தயாராக உள்ளன. குறிப்பிட்ட ஆவணங்களும் வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட தொகை வைத்தால் போதும் கடன் கொடுத்து விடுவார்கள்.
ஆனால் தற்போது ஆதார் அட்டை பயன்படுத்தியே இந்த 22 நிதி நிறுவனங்களில் கடன் பெறலாம் என்ற அறிவிப்பு நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.