இவர்களுக்கும் இனி ஆதார் அட்டை வழங்கப்படும்! சிறைத் துறை வெளியிட்ட அறிவிப்பு!
சிறைத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தமிழக சிறைத் துறையின் கீழ் 9 மத்திய சிறைகள், 14 மாவட்ட சிறைகள், 96 கிளை சிறைகள்,5 பெண்கள் சிறப்பு சிறைகள்,12 பார்ஸ்டல் பள்ளிகள்,3 திறந்த வெளி சிறைகள் மற்றும் சிறப்பு சிறைகள் என மொத்தம் 142 சிறைகள் இருக்கின்றது.
இந்நிலையில் இந்த 142 சிறைகளிலும் 23,592 கைதிகள் வரை அடைக்க வாய்ப்புள்ளது.ஆனால் சுமார் 18,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.தமிழக சிறைகள் 75 சதவீதம் வரை நிரம்பி உள்ளது.
இவ்வாறு சிறையில் இருக்கும் கைதிகள் அவரவர்களின் சிறை தண்டனை காலம் முடிவடைந்த பிறகு வெளியே சென்ற பின்பு வெளியில் ஒரு வேலையில் சேர்வதற்கும் ,தொழில் தொடங்குவதற்கும் மற்றும் வங்கி கடன் பெறுவதற்கும் ஆதார் அட்டை இல்லாமல் சிரமம் அடைந்துள்ளனர்.
இவ்வாறான சிரமத்தை தடுக்கும் வகையில் சிறைத் துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி ,கைதிகளுக்கு ஆதார் அட்டை பெற்று தருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.மேலும் சமீபத்தில் மத்திய அரசு சிறைகளில் ஒவ்வொரு கைதிகளுக்கும் அடையாள பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டு ஆதார் அட்டை வழங்க உத்தரவிட்டனர்.
அந்த உத்தரவின் பேரில் முதல் கட்டமாக திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் வகையில் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.அந்த முகாமில் சுமார் 300 கைதிகளுக்கு ஆதார் அட்டை பெற்றுக் கொடுக்கும் வகையில் அவர்களின் கைரேகை, புகைப்படம் போன்றவைகள் எடுக்கப்பட்டது.
மேலும் இது போலவே மாநிலம் முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகளுக்கு ஆதார் அட்டை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைத்துறை தெரிவித்துள்ளனர்.