மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு விவகாரம்! வழக்கு ஒத்திவைப்பு!
மின் கட்டணம் உயர்வை தொடர்ந்து தற்போது மின் இணைப்புடன் ஆதார் எண்னை இணைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றது.தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துடன் கட்டணத்தை அரசு மானியமாக வழங்கி வருகின்றது. இந்த மானியத்தை பெறுவதற்கு மின் நுகர்வோர் அவரவர்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்னை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் தேசிய மக்கள் கட்சித் தலைவர் வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் அந்த மனுவில் அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என கோரப்பட்டிருந்தது.மேலும் ஆதார் இணைப்பு என்பது ஒரு வீட்டிற்கு மட்டுமே செய்ய முடியும் ஆனால் வாடகை வீட்டில் இருப்பவரக்ள் வீடு மாறி கொண்டேதான் இருப்பார்கள்.அவர்கள் எவ்வாறு மின் இணைப்புடன் ஆதார் எண்னை இணைக்க முடியும் இதில் சிக்கல் ஏற்படும் என கூறப்பட்டிருந்தது.
ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றது.ஆனால் சட்டப்படி ஆதார் எண்ணுக்கு பதில் பயன்படுத்தக் கூடிய வேறு ஆவணங்களை பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.மேலும் ஆதார் எண் மின் இணைப்புடன் இணைக்கவில்லை என்றால் மின் மானியம் வழங்கப்படாது என அறிவித்துள்ளனர்.ஆதாரை கட்டாயமாக்குவதாக இருந்தால் அதற்கு மாநில தொகுப்பு நிதியில் இருந்து வழங்க வேண்டும்.இந்த மனு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் விடுத்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்கை நாளை தள்ளிவைத்தனர்.