இனி இதற்கும் ஆதார் எண் கட்டாயம்!! மாநில  அரசு அதிரடி அறிவிப்பு!!

Photo of author

By Jeevitha

இனி இதற்கும் ஆதார் எண் கட்டாயம்!! மாநில  அரசு அதிரடி அறிவிப்பு!!

Jeevitha

Aadhaar number is mandatory for this too!! State Government Action Notification!!

இனி இதற்கும் ஆதார் எண் கட்டாயம்!! மாநில  அரசு அதிரடி அறிவிப்பு!!

ஆதார் கார்டுகளை இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் ஆதார் அட்டைகளை விநியோகம் செய்து வருகிறது. மேலும் மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் மிக முக்கிய அட்டையாக உள்ளது. அதனை தொடர்ந்து மானியங்கள் மற்றும் வங்கி சேவைகள் போன்ற பல்வேறு விதமான சேவைகளை பெற ஆதார் எண் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாநில, மத்திய அரசு மானியங்கள் மற்றும் சலுகைகள் பெறவதற்கு ஆதார் எண் வைத்திருக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்திருந்தது. மத்திய அரசு தர கூடிய அனைத்து சலுகை பெறுவதற்கு ஆதார் அட்டை மிகவும் அவசியம். அதே போல் அனைத்து மாநில அரசுகளும் ஆதார் அட்டை பயன்படுத்தி சலுகைகளை அறிவித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டடோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபானமையினர் நலத்துறையில் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு இனி ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அனைத்து நலத்திட்ட உதவிகளை பெற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்று தெரிவித்துள்ளது.

அனைத்து பயனாளிகள் அனைவரும் விண்ணப்ப சான்றிதழ்களில் ஆதார் எண் கடிப்பாக இருக்க வேண்டும். அதனை தொடர்ந்து ஆதார் எண் வழங்கப்படும் வரை அதே ஒரு   ஆவணங்களை அடையாளச் சான்றாக வழங்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.