இந்த அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா? ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ரூ 1000 அபராதம்!

Photo of author

By Parthipan K

இந்த அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா? ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ரூ 1000 அபராதம்!

இந்தியாவில் தற்போது ஆதார் அட்டை என்பது முக்கிய ஆவணங்களில் ஒன்றாக மாறி வருகிறது அந்த வகையில் ஆதார்  ரேஷன் அட்டை, வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களுடன்  இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. தற்போது தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் அட்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. அந்த வகையில் பான் அட்டையுடன் ஆதார் இணைப்பது முக்கியம்.

பான்  எண் என்பது இல்லாவிட்டால் நிதி ரீதியான எந்த ஒரு சேவையும் செய்ய முடியாது. அவ்வாறு முக்கியமாக பயன்படுத்தப்படும் பான்  அட்டையுடன் ஆதார்  இணைக்க வேண்டும் என பல்வேறு முறை அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. இதற்காக முன்னதாகவே போதுமான அளவு கால அவகாசமும் மத்திய அரசு கொடுத்து வருகின்றது. இந்நிலையில் ஆதார் பான் இணைப்புக்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டு இம்மாதம் 31ஆம் தேதி வரையிலும் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்திற்குள் பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் உங்களது பான் அட்டை  செல்லாது. அதனால்  முன்பாக உங்களது ஆதார் பான்  எண்ணை  இணைத்து விட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இணைக்கவில்லை என்றால் பான் கார்டு பயன்படுத்த முடியாது , வருமான வரி தாக்கல் செய்ய முடியாமல் போகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு வழங்கிய இந்த கால அவகாசத்திற்குள் ஆதார் எண்னை  பான் கார்டுடன் இணைக்காவிட்டால் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 1000 ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.