இந்த கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா! ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ரூ 10,000 அபராதம்!
மத்திய அரசானது முன்னதாகவே நிரந்தர கணக்கு எண் அதாவது பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதனை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. மேலும் அதனை மேற்கொள்ள போதுமான அளவு கால அவகாசத்தையும் அவ்வப்போது நீட்டித்து வருகிறது. தொடர்ந்து பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மேலும் இந்த இணைப்பிற்கு கால அவகாசம் இம்மாதம் 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்து மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க விலக்கு அளிக்கப்பட்டவர்களை தவிர மீதமுள்ள அனைவரும் பான் அட்டையுடன் ஆதாரை வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைத்திருக்க வேண்டும் அவ்வாறு இணைக்கவில்லை என்றால் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அந்த பான் கார்டு செயலிழக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஆதார் அட்டைதாரர்கள் என்ற இணையதளம் மூலமாக பான் கார்டு இணைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அதனுடன் அந்த எண்ணிற்கு எஸ் எம் எஸ் அனுப்பியும் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைக்கலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை செய்ய தவறினால் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.