கொரோனா பரவல் காரணமாக ஆதார் பதிவு மற்றும் ஆதார் திருத்தம் செய்யும் சேவைகள் தற்காலிகமாக நாமக்கல் கோட்டத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.
ஜூன் 8-ஆம் தேதிலிருந்து
இந்த சேவை மீண்டும் அஞ்சலகங்களில் இரண்டு தலைமை அஞ்சலகங்கள் மற்றும், 36 துணை அஞ்சல் அலுவலகங்களில், வழக்கம் போல் ஆதார் பதிவு மற்றும் ஆதார் திருத்த சேவை செயல்பட்டு வருகிறது. இதுவரை, நாமக்கல் கோட்டை பகுதி மக்கள் 271 புதிதாக ஆதார் அட்டைக்கு புதிதாக பதிவு செய்துள்ளனர். மேலும் 2,302 எடுக்கப்பட்ட ஆதார் அட்டையில், திருத்தங்கள் செய்ய விண்ணப்பித்துள்ளனர். நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு தலைமை அஞ்சலகம், கணேசபுரம், நல்லிபாளையம், நாமக்கல் மாவட்ட நீதி மன்ற வளாகம்,மோகனூர்,
வளையப்பட்டி எருமைப்பட்டி, , பாலப்பட்டி,இடைப்பாடி, வடக்கு,சித்தாளந்தூர், கொங்கணாபுரம், புதுச்சத்திரம், செல்லப்பம்பட்டி, மகுடஞ்சாவடி, வெல்லாண்டி வலசை, எலச்சிபாளையம்,
சீதாராம்பாளையம், கந்தம்பாளையம்,
ஜேடர்பாளையம், குமாரமங்கலம், பரமத்தி, பாண்டமங்கலம், பொத்தனூர், வேலகவுண்டம்பட்டி,ப.வேலூர், சேந்தமங்கலம், குச்சிபாளையம், சங்ககிரி துர்க், சங்ககிரி மேற்கு, காளப்பநாயக்கன்பட்டி, முத்துக்காபட்டி. வையப்பமலை, செம்மேடு, மல்லசமுத்திரம், பள்ளிபாளையம்,அக்ரஹாரம், குமாரபாளையம் ஆகிய, 36 துணை அஞ்சலகங்களிலும், இந்த சேவையை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் , தங்களுக்கான சேவையை பெற்று பயன்பெறலாம். என்றும் நாமக்கல் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.