சாலை விரிவாக்க பணிக்காக 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடிப்பு?

0
209

திருவாரூர் -மயிலாடுதுறை இடையே உள்ள முடிகொண்டான் கிராமம் வழியாக சாலை விரிவாக்கம் செய்ய கடந்த 2016ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது.இந்த நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் சாலையின் இருபுறங்களிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து அந்தப்பகுதி குடியிருப்புவாசிகள் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வீடுகளின் முன் பகுதி இடிப்பதற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.மேலும் அதற்கு இழப்பீடு தொகையாக 20,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுத்தர குடும்ப மக்களின் வீடுகள் ஏற்கனவே சிறியதாக கட்டப்பட்டு இருக்கும் நிலையில் வீட்டின் முன்பகுதி இடித்து விட்டால் அந்த வீட்டில் இருக்க முடியாத நிலை ஏற்படும் அதுமட்டுமின்றி அரசாங்கத்தால் தரப்படும் இந்த 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகையால் புதிதாக நிலம் வாங்கி வீடு கட்ட முடியாது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மேலும் இது தொடர்பாக அரசாங்க அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
தற்போது மக்கள் சாலையை மாற்று பாதையில் அமைத்துக் கொள்ளுமாறும் அதற்கான நிலங்களை தாங்களே தருமாறும் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.சாலையை மாற்றுப்பாதையில் அமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் அப்பகுதி மக்கள்.

Previous articleகரடியின் பிடி மேலும் இருக்குமா?
Next articleதிருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதியில் ஆதார் பதிவு மற்றும் ஆதார் திருத்தச் சேவைகள் மீண்டும் தொடக்கம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here