TVK : தமிழக அரசியலானது சற்று பரபரப்பான சூழலில் உள்ளது, ஒவ்வொரு கட்சி சேர்ந்த நிர்வாகியும் டெல்லிக்கு சென்று வந்தாலே அடுத்து என்னவாக இருக்கும் என்ற கேள்வி உண்டாகிறது. குறிப்பாக கூட்டணியிலேயே இணைய மாட்டோம் என்று கூறி வந்த அதிமுகவானது தற்சமயம் பாஜகவுடன் இணக்கமாக தயாராகி விட்டது. இதற்கு பின்னணியில் பல தகவல்கள் வந்தாலும் இது ரீதியாக இம்மாதம் இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும் என கூறுகின்றனர்.
ஆனால் இவர்கள் கூட்டணியானது தமிழக வெற்றிக் கழகத்திற்கு தான் பெரிய அடியாக இருக்கும். திமுக போன்ற ஆளும் கட்சியை எதிர்க்க வேண்டுமென்றால் அரசியல் கூட்டணியை பலப்படுத்த வேண்டும். அப்படி அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்ற மனக்கணக்கில் தான் விஜய் இருந்துள்ளார். ஆனால் விஜய் போட்ட கண்டிஷன்கள் எதுவும் ஒத்துப்போகாத நிலையில் எடப்பாடி மீண்டும் பாஜகவே கெதி என சென்றுள்ளார்.
இதனால் செய்வதறியாத விஜய், அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசனை செய்ய உள்ளார். அதேபோல தவெக வின் தேர்தல் வியூக அமைப்பாளராக ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆப் காமன் நிறுவனம் செயல்பட உள்ளது. இதனால் அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசனை செய்ய டெல்லிக்கு சென்று பிரசாந்த் கிஷோரை சந்திக்க உள்ளார். இவர்கள் சந்திப்பிற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகமானது கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கும் எனக் கூறுகின்றனர். அதிமுக கூட்டணி போல் பலமான கூட்டணியை உருவாக்க ஆலோசனை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.