எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சியானது நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் திருமாவளவன் கலந்து கொள்ள இருந்த நிலையில் தவெக தலைவர் விஜய் கலந்துகொள்ள இருப்பதால் அதனை முழுமையாக தவிர்த்தார். இதனால் சமூக வலைத்தளத்தில் பல வகை விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் அவரது தரப்போ அரசியல் வியூகம் குறித்து அமைக்கும் பேச்சுக்களுக்கு இடம் தரக்கூடாது என்பதால் இதனை தவிர்த்ததாக கூறினார்.
இவரின் அனைத்து பதிலும் முட்டுக் கொடுக்கும் விதமாகத் தான் இருந்தது. அதேசமயம் விடுதலை சிறுத்தை கட்சியின் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைப்புவதாக செய்திகள் பரவியது. இதனை உறுதி செய்யும் வகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது பேச்சானது திமுகவை நேரடியாக தாக்கும் விதத்தில் அமைந்தது. வேங்கை வயல் என தொடங்கி பல சட்டரீதியான பிரச்சினைகளில் திமுக எடுத்த நடவடிக்கைகள் குறித்து விமர்சனம் செய்திருந்தார்.
இவையனைத்தும் திமுகவின் சீனியர் சிட்டிசன்களை கோபத்தில் ஆழ்த்த செய்துள்ளது. அதுமட்டுமின்றி திருமாவளவனை இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆதவ் அர்ஜுனாவை கட்சியை விட்டு நீக்கம் செய்ய சொல்லி கூட்டணி மற்றும் உட்கட்சி ரீதியாக திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். திமுகவை நேரடியாக சாடி பேசியதால் ஆதவ் அர்ஜுனா கட்சி விட்டு நீக்கம் செய்யப்படுவார் என அரசியல் வட்டாரங்களில் கூறுகின்றனர்.