செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலக இதோ பரிகாரம்!

0
131

திருமண தடை ஏற்படுத்தும் செவ்வாய் தோஷம் நீங்குவதற்கு ஆடி மாத கடைசி செவ்வாய்க் கிழமையில் விரதம் இருந்து அம்மனை வழிபடுவது மிகவும் சிறப்பு என்று சொல்லப்படுகிறது. பெண்கள் மங்கள கௌரி விரதம் இருந்தால் சிறப்பு பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க் கிழமையில் மறவாமல் அம்மனை தரிசித்து மனதளவில் வேண்டிக்கொண்டால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்று சொல்லப்படுகிறது0 ராகுகால வேளையில் அம்மனை தரிசித்து செவ்வரளி மாலை சாத்த வேண்டும். அதோடு துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபாடு நடத்துவது நல்லது என்று சொல்லப்படுகிறது.

ஆடி மாத கடைசி செவ்வாய்க் கிழமையில் அம்மனின் தரிசனம் செய்வதால் தடைபட்ட மங்கள காரியங்கள் இனிதே நடக்கும் என்று சொல்லப்படுகிறது0 பெண்கள் ஆடி மாத கடைசி செவ்வாய்க் கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் செய்தால் மற்ற தினங்களில் செய்வதை விடவும் அதிக நன்மை நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. செவ்வாய் தோஷத்தால், நாக தோஷத்தால் திருமணம் நடைபெறாமல் இருப்பவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், செவ்வாய்க் கிழமைகளில் விரதமிருந்து ராகுகால பூஜையில் பங்கேற்றால் நல்லது என்று சொல்லப்படுகிறது.

ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளில் மட்டும் அல்லாமல் பொதுவாகவே செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானுக்கு விரதம் கடைப்பிடிப்பது மிக நன்று என சொல்லப்படுகிறது..

Previous articleஸ்ரீரங்கம் ஆடிப்பூர உற்சவ விழா!
Next articleஆடி மாத தேய்பிறை பிரதோஷ விரதம் இருந்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன?