ஆடி மாத தேய்பிறை பிரதோஷ விரதம் இருந்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

0
78

வாழ்க்கையின் பிறப்பு இறப்பு என்று சுழற்சி முறையில் நடந்து கொண்டிருக்கும் ஒரு செயல்பாட்டை முற்றுப்பெற வைத்து வீடுபேறு அளிக்கும் ஒரு தெய்வமாக சிவபெருமான் இருந்து வருகிறார். அவரை வழிபடுவதற்கு உரிய ஒரு அற்புத தினம்தான் பிரதோஷம் ஆடி மாதத்தில் வருகின்ற ஆடி தேய்பிறை பிரதோஷ தினத்தில் சிவனை எவ்வாறு வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கே நாம் தெரிந்துகொள்வோம்.

ஆடி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி உணவு எதுவும் சாப்பிடாமல் சிவபெருமானுக்கு விரதம் இருக்கலாம். ஆடி தேய்பிறை பிரதோஷ தினமான அன்று பிரதோஷ நேரமான மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரையிலான சமயத்தில் அருகில் இருக்கின்ற சிவன் கோவிலுக்கு சென்று சோமசூக்த பிரதட்சணம் வந்து வணங்க வேண்டும்.

அதன்பின்னர் நந்திதேவர் மற்றும் சிவபெருமானின் அபிஷேகத்திற்கு பொருட்களை தானம் கொடுப்பது சிறந்தது அதோடு நந்திக்கு அருகம்புல் மாலை சாற்றி வெல்லம் கலந்த அரிசியை நந்தி பகவானுக்கு நைவேத்தியமாக வைப்பது நல்லது என்று சொல்லப்படுகிறது. பிரதோஷ சமயத்தில் பூஜை செய்து நந்தி மற்றும் சிவபெருமான் பார்வதி தேவியை வணங்க வேண்டும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து வெள்ளை நிற பசுவிடமிருந்து கறந்த பாலைக் கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்து வில்வ இலை மல்லிகை பூக்கள் சாற்றி வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆடி தேய்பிறை பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் சமயத்தில் அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும், சித்தபிரமை மனநல குறைபாடுகள் உள்ளிட்டவை குணமாகும். வேலை கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு மிக விரைவில் வேலை கிடைக்கும் வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்களும் நடந்தேறும் என்று சொல்லப்படுகிறது.