குழந்தை வரத்தை கொடுக்கும் ஆடி கிருத்திகை வழிபாடு!! விரதம் மற்றும் பூஜை விவரம்!!

Photo of author

By Rupa

குழந்தை வரத்தை கொடுக்கும் ஆடி கிருத்திகை வழிபாடு!! விரதம் மற்றும் பூஜை விவரம்!!

தமிழ் மாதங்களிலேயே ஆடி மாதம் மிகவும் பக்திமையமான மாதமாக திகழ்கிறது.இந்த மாதத்தில் அம்மன் வழிபாடு அதிகளவு நடைபெறும்.குறிப்பாக ஆடி முதல் வெள்ளி மிகவும் ஸ்பெஷல் தினமாக பார்க்கப்படுகிறது.ஆடி 1,ஆடி 18 மற்றும் ஆடி 28 என்ற விசேஷ நாட்களில் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.ஆடி 18 அதாவது ஆடி பெருக்கு அன்று தாலி கயிறு மாற்ற மிகவும் விசேஷ நாளாக பார்க்கப்படுகிறது.இந்நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும்.

அடுத்து ஜூலை 29 அன்று வரக் கூடிய ஆடி கிருத்திகை வழிபாடு பல நன்மைகளை வழங்கக் கூடியதாக உள்ளது.முருக பெருமானுக்கு உகந்த நாளான ஆடி கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் கோடி நன்மைகள் கிடைக்கும்.ஆடி கிருத்திகைக்கு முந்தின நாள் இல்லத்தை சுத்தம் செய்து வழிபாடு மேற்கொள்வதற்கான பொருட்களை வாங்கி வைத்து விட வேண்டும்.

அடுத்த நாள் அதாவது ஆடி கிருத்திகை அன்று காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தலைக்கு குளித்துவிட்டு விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.பிறகு வீட்டு பூஜை அறையில் வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.கிருத்திகை நாளில் காலை முதல் மாலை வரை எதையும் உட்கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும்.மாலையில் வழிபாட்டை முடித்த பின்னர் சைவ உணவு உட்கொள்ள வேண்டும்.இவ்வாறு விரதம் இருந்து வழிபாடு மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.