தேவகோட்டை முனீஸ்வரர் கோயிலில் ஆடி மாத திருவிழா! போலீசார் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
தாசில்தார் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி திருவிழா நடத்திக் கொள்ள அனுமதி தந்தும் போதிய போலீசார் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த முருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்
அதில் “சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் உள்ள தத்தாத்ரேய முனீஸ்வரர் கோயிலில் ஆடி மாத திருவிழாவில் நடத்துவதற்கு தேவகோட்டை தாசில்தார் பிறப்பித்த தடை உத்தரவை நீக்கி திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.தேவகோட்டை தாசில்தார் தத்தாத்ரேய முனீஸ்வரர் கோயிலில் திருவிழாவில் முதல் நாள் திருவிழாவில் முதல் மண்டகப்படி அமைப்பது தொடர்பாக இரு குழுவினர்களுக்கு இடையே பிரச்சனைகளை வருகிறது.
இதற்காக அமைதி பேச்சுவார்த்தை நடத்தி எந்த முடிவும் கிடைக்காத நிலையில் மொத்தத் திருவிழாவுக்கும் தடை விதித்து தேவகோட்டை தாசில்தார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த தடை உத்தரவை ரத்து செய்து திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கை பொறுத்தவரை வட்டாட்சியர் அதிகாரத்தை மீறி திருவிழாவிற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே தாசில்தார் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கி வழக்கினை முடித்து வைத்தார்.