புத்திர பாக்கியம் தரும் கோவில் வழிபாடு

0
172

ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சாரம் செய்யும் பொழுது சுக்கிரனுக்குரிய பூரம் நட்சத்திரம் வரும் நாள் தான் ஆடிப்பூரம் என்று அழைக்கப்படுகின்றது. இதனால் இந்த வருடம் வருகின்ற பதினோராம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. ஆடிப்பூர தினத்தில் அம்பிகை வழிபாட்டை நம்பிக்கையுடன் மேற்கொண்டால் புத்திரப்பேறு வாய்ப்பு காத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. புத்திர பாக்கியத்திற்காக காத்திருக்கும் தம்பதிகளுக்கு புத்திர பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை என்று சொல்லப்படுகிறது.

ஒரு சில ஆலயங்களில் முளைக்கட்டிய பயிரை தயார் செய்து அம்பிகைக்கு நைவேத்தியம் செய்வார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆடி பூரத்திற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னதாகவே பச்சை பயிரை தண்ணீரில் நனைய வைத்து அது ஆடிப்பூரம் தினத்தன்று நன்றாக முளை கட்டி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல அந்த முளைகட்டிய பயிறை அம்பிகைக்கு நைவேத்தியமாக படைத்து விட்டு குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் பெண்களுக்கு கொடுப்பார்கள். நம்பிக்கையுடன் அதை சாப்பிட்டுவந்தால் வாரிசு உருவாகும். நம்முடைய வீட்டிலும் இந்த வழிபாட்டை அனைவரும் மேற்கொள்வோம்.

Previous articleமனு கொடுக்க வந்தவர்களிடம் சாப்பிட்டு போக பணம் கொடுத்து அனுப்பிய பாமக எம்.எல்.ஏ! குவியும் பாராட்டு
Next articleபைரவருக்கான தேய்பிறை அஷ்டமி விரதம்