டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை:ஆட்சி அமைக்குமா ஆம் ஆத்மி?

0
148

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை:ஆட்சி அமைக்குமா ஆம் ஆத்மி?

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியுள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்தது. அதையடுத்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையானப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் உள்ள 70 தொகுதிகளில் ஆட்சியமைக்க 36 தொகுதிகள் தேவை. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையில் காலை வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது. இந்த வாக்கு எண்ணிக்கையில் ஆரம்ம முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வந்தது. சற்று முன்பு வரை ஆம் ஆத்மி 53 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது.

பாஜக 16 தொகுதிகளிலும் , காங்கிரஸ் 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றது. இதனால் தனிப் பெரும்பான்மையாக ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமித்ஷா மற்றும் மோடி ஆகியோரின் தீவிரப் பிரச்சாரங்களுக்கு இடையில் ஆம் ஆத்மி வெற்றி பெறுவது அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கையேக் காட்டுகிறது.

இந்த தேர்தலில் குடியுரிமைத் திருத்தச் சட்டம், டெல்லி பல்கலைக் கழக மாணவர்கள் தாக்கம், எனப் பல காரணிகள் பாஜகவுக்கு எதிராக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பின் பாஜக சட்டமன்றத் தேர்தல்களில் வரிசையாக தோற்றுவருவது வாடிக்கையாக உள்ளது.

Previous articleடெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி: 3வது முறை முதல்வராகும் அரவிந்த் கெஜ்ரிவால்
Next articleராகுலின் மாஸ்டர் இன்னிங்ஸ்: இந்தியா 296 ரன்கள் சேர்ப்பு! வெற்றி பவுலர்கள் கையில்!