இபிஎஸ் கூடாரத்தில் அமமுக பொருளாளர்! காலியாகும் தினகரன் கூடாரம்!

Photo of author

By Vijay

இபிஎஸ் கூடாரத்தில் அமமுக பொருளாளர்! காலியாகும் தினகரன் கூடாரம்!

Vijay

இபிஎஸ் கூடாரத்தில் அமமுக பொருளாளர்! காலியாகும் தினகரன் கூடாரம்! 
தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கட்சியிலிருந்து விலகி பலர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வரும் நிலையில், தற்போது அக்கட்சியின் பொருளாளர் மனோகர் என்பவரும் விலகி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் இருந்து பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை கடந்த சில ஆண்டுகளாக டிடிவி தினகரன் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் சேகர் என்ற பேரூராட்சி தலைவர் அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருடன் மேலும் சில அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் இணைந்தனர்.
இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் மற்றும் திருச்சி மாவட்ட செயலாளர் மனோகரன் கட்சியில் இருந்து விலகியதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் இன்று எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூடாரம் மெல்ல மெல்ல காலி ஆகி வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.