அஜித் குறித்து ஆரவ் ஓப்பன் டாக்!!

Photo of author

By Gayathri

அஜித் குறித்து ஆரவ் ஓப்பன் டாக்!!

Gayathri

Aarav Open Talk on Ajith!!

அஜித் நடிப்பில் வெளிவந்திருந்த விடா முயற்சி திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருந்தது. சில எதிர்மறை விமர்சனங்களையும் சந்தித்து வந்து இருந்தது. எனினும் அஜித் ரசிகர்களுக்கு இது விருந்தாகவே அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் ஆரவ் வில்லன் குரூப்பில் முக்கியமான ஒருவராகவும், அஜித்தை எதிர்த்து வன்மையாக பேசிய ஒரு டயலாக்கும் வைரலாக பரவி இருந்தது.

இந்நிலையில் ஜனவரி 16 சேலத்தில் உள்ள தனியார் தியேட்டரில் ஆரவ் மற்றும் நடிகை ரெஜினா இணைந்து விடாமுயற்சி படத்தை பார்த்து இருந்தனர். அதன் பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவரிடம், செய்தியாளர் ஒருவர் அஜித்தை நீங்கள் இவ்வாறு எதிர்த்துப் பேசியதை அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்களா? எனக் கேட்டுள்ளார். அதற்கு ஆரவ், அஜித் சாரே படப்பிடிப்பின் போது, என் ரசிகர்களுக்கு எது படம்? எது நடிப்பு? எது உண்மை? என்று தெரியும் எனக் கூறியுள்ளார். படம் ரிலீஸின் போது 10 வெவ்வேறு தியேட்டர்களில் அவரின் ரசிகர்களுடன் படம் பார்த்து உள்ளேன். ரசிகர்கள் என்னை பாராட்ட தான் செய்தார்கள்! என்று அவர் கூறியுள்ளார்.