நாளை முதல் பால் விலை உயர்கிறது!! அதிர்ச்சியில் தமிழக மக்கள்!!

Photo of author

By Sakthi

AAROGYA MILK :நாளை முதல் ஆரோக்யா நிறுவனம் பால் விலையை உயர்த்துகிறது.

தமிழகத்தில் பொது மக்களின் அத்தியாவசிய பொருளான  பால், அரசால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.பொதுமக்கள் தேவைக்கென 10 ரூபாய் முதல் கால் லிட்டர், அரை லிட்டர், ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தைப் போலவே  தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் முன்னணி நிறுவனமான
ஆரோக்யா நிறுவனம் நாளை  முதல் பால் விலையை உயர்த்துகிறது என்ற தகவலை வெளியிட்டு உள்ளது. அதில் ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.65ல் இருந்து 67 ஆக உயர்த்தப்பட இருக்கிறது.

இது குறித்து  தமிழ்நாடு பால் முகவர் தொழிலாளர் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி கூறுகையில்  ஆரோக்கியா நிறுவனம் பால் முகவர்கள் சுற்று அறிக்கையில் பிற அண்டை மாநிலங்களில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி உள்ளனர், அந்த வகையில் தமிழகத்தில் பால் விற்பனை விலை நாளை முதல் லிட்டருக்கு  2 ரூபாய் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவித்தார் .

அந்த நிறுவனம். அந்த வகையில் நிறை கொழுப்பு பால் அரை லிட்டர் பாக்கெட் ரூ.36ல் இருந்து 37 ஆகவும், ஒரு லிட்டர் பாக்கெட் ரூ.65ல் இருந்து 67 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் ரூ.31 ல் இருந்து 32 ஆகவும், ஒரு லிட்டர் ரூ.58ல் இருந்து 60 ஆகவும், 400 கிராம் தயிர் பாக்கெட் ரூ.30 லிருந்து 32 ஆகவும், 500 கிராம் தயிர் ரூ.37 லிருந்து 38 ஆகவும், 1 கிலோ தயிர் ரூ.66-லிருந்து 68 ஆகவும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.