கூடுதல் விலைக்கு பால் விற்பனை அமோகம்! ஆவின் நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

Photo of author

By Mithra

கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை அமோகம்! ஆவின் நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என அறிவித்தார். இதைத் தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

அனைத்து ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைத்து, ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரின் ஆணையின்படி, ஆவின் மேலாண்மை இயக்குநர் உடனடியாக சிறப்பு குழுவை அமைத்து சென்னையில் உள்ள அனைத்து சில்லறை விற்பனை கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அந்த ஆய்வுகளின் அடிப்படையில் 21.05.2021 அன்று 11 சில்லறை விற்பனை உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்தது. தற்பொழுது மேலும் சிறப்பு குழு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்ட போது கீழ்கண்ட 10 சில்லறை விற்பனை கடைகளில் ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்பதாக தெரியவந்தது.

சில்லறை விற்பனையாளரின் உரிமம் (FRO) எண், விற்பனையாளரின் பெயர், விற்பனை செய்யப்பட்ட பகுதி பின்வருமாறு

  1. 2271 நேதாஜி ஈட்டியாபுரம்
  2. 2316 அமிர்தக்கவி ஓல்டு பெருங்களத்தூர்
  3. 1686 ரூப் பிரசாத் நியூ பெருங்களத்தூர்
  4. 2097 ஜெயந்தி நியூ பெருங்களத்தூர்
  5. 1986 லக்ஷ்மணன் வெஸ்ட் தாம்பரம்
  6. 1639 கோதண்டராமன் வரதராஜபுரம்
  7. 403 சாய் ஸ்டோர்ஸ் நியூ பெருங்களத்தூர்
  8. 2169 முரளிதாஸ் சூளைமேடு
  9. 1594 வினோத் குமார் வண்ணாரப்பேட்டை
  10. 2197 S.M மில்க் நிலையம் திருவொற்றியூர்

மேற்கண்ட நபர்களுடைய சில்லறை விற்பனை உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டன. இது போன்ற தவறுகளை சில்லறை விற்பனை உரிமையாளர்கள் செய்யும் பட்சத்தில் அவர்கள் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.