ஆவின் சிவப்பு நிற பாக்கெட் பால் விற்பனை நிறுத்தம்! இதற்காகத்தான் விற்பனை நிறுத்தப்படுகிறதா!
ஆவின் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் பால் பாக்கெட்டுகளில் சிவப்பு நிற டீமேட் பால் பாக்கெடும் ஒன்று. இந்த பால் பாக்கெட்டின் உற்பத்தி மற்றும் விற்பனையானது படிப்படியாக குறைக்கப்படும் என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.
டீ கடைகள், கேண்டீன்கள், இனிப்பகங்கள் போன்றவைகளின் தேவைக்காக இந்த சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அரை லிட்டர் பால் பாக்கெட்டின் விலை 34 ரூபாய் ஆகும். இந்த சிவப்பு நிற பால் பாக்கெட்டில் 6.5 சதவீதம் கொழுப்புச் சத்துகள் உள்ளது. இந்த சிவப்புற டீ மேட் பால் பாக்கெட்டுகள் மூலம் ஆவின் நிறுவனத்திற்கு லிட்டருக்கு 8 ரூபாய் இலாபம் கிடைத்து வந்தது. இந்த நிலையில் சிவப்பு நாற பால் பாக்கெட்டுகளின் விற்பனையை நிறுதப் போவதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.
இயந்திரக் கோளாறு காரணமாக மாதவரம் பால் பண்ணையில் சிவப்பு நிற பால் பாக்கெட் உற்பத்தி நடக்காது என்று கூறியுள்ள ஆவின் நிர்வாகம் படிப்படியாக மற்ற பால் பண்ணைகளிலும் இந்த சிவப்பு நிற பால் பால் பாக்கெட்டின் உற்பத்தியை நிறுத்தவுள்ளது.
இதே அளவு கொழுப்புச் சத்து நிறைந்த பால் தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றது. இந்த நிலையில் ஆவின் நிறுவனம் தனியார் நிறுவனங்களின் இலாபத்திற்காக மறைமுகமாக சிவப்பு நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனையை நிறுத்தியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.