கோவில் வாசலில் கிடந்த பெண் குழந்தை!

Photo of author

By Parthipan K

கோவில் வாசலில் கிடந்த பெண் குழந்தை!

Parthipan K

குழந்தைகளை குப்பைத்தொட்டியில் போடுவதும், பொது இடங்களில் வீசுவதும் எப்போதும் நடக்கும் நிகழ்வே.

பெண் குழந்தை ஒன்றை கோவில் வாசலில் போட்டு சென்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னமேடு கிராமத்தில் கங்கை அம்மன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவில் வாசலில் அழுது கொண்டு இருந்து இருக்கிறது.

இதைக் கண்ட பொது மக்கள் போலீசாரிடம் தகவல் சொல்லி இருக்கின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பிறகு குழந்தைகள் காப்பகத்தில் குழந்தை சேர்க்கப்படும்.

குழந்தையை பெற்றோர் அல்லது உறவினர்கள் கொண்டு வந்து போட்டார்களா, இல்லை குழந்தையை கடத்தி கொண்டு வந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.