மாநில அளவிலான ஆணழகன் போட்டி!! 18 வயதில் பட்டத்தை தட்டி சென்று வரலாற்று சாதனை படைத்த இளம் வீரர்!!

Photo of author

By Rupa

மாநில அளவிலான ஆணழகன் போட்டி!! 18 வயதில் பட்டத்தை தட்டி சென்று வராலாற்று சாதனை படைத்த இளம் வீரர்!!

எங் இந்தியா எனும் அம்மைப்பானது “மாமதுரை” என்கின்ற மதுரையின் பெருமைகளை உலகறிய செய்ய பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.அந்த நிகழ்வுகளில் ஒன்றாக மாநில அளவிலான ஆணழகன் போட்டியை நடத்தினர். அந்த போட்டியானது 10.08.2024 அன்று மதுரை மாநகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலந்துக்கொண்டனர்.

அந்தவகையில்  இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக தொண்டியைச் சேர்ந்த அபிஷேக் ஆனந்தன் எனும் இளைஞன் ஜூனியர் மிஸ்டர் தமிழ்நாடு (21 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆணழகன்) போட்டியில் வெள்ளிப் பதக்கமும், சீனியர் மிஸ்டர் தமிழ்நாடு என்கின்ற ஓப்பன் கேட்டகிரியில் 60 கிலோ எடை பிரிவினருக்கான ஆணழகன் போட்டியில் வெண்கல பதக்கமும் பெற்றார். வெற்றி பெற்ற அபிஷேக் ஆனந்தனுக்கு பதக்கமும், சான்றிதழும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.இதர போட்டியாளர்களை காட்டிலும் இவருக்கு வயது குறைவு தான். தனது 18 வயதிலேயே இவ்வாறு சாதனை படைத்ததை குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர்.