உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில் பிரதோஷத்தை முன்னிட்டு மகாநந்திக்கும் பெருமானுக்கும் திரவிய பொடிகளால் அபிஷேகம்!!

0
197
#image_title

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில் பிரதோஷத்தை முன்னிட்டு மகாநந்திக்கும் பெருமானுக்கும்-பால், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர்’ கரும்புசாறு, எலுமிச்சைசாறு, பஞ்சாமிர்தம், பன்னீர், உள்ளிட்ட திரவிய பொடிகளால் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோவிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பெரிய கோவிலில் வீற்றிருக்கும் மகா நந்தியம் பெருமானுக்கு பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க, திரவிய பொடி மஞ்சள், பால், இளநீர், தயிர், சந்தனம், கரும்புசாறு, எலுமிச்சைசாறு, பஞ்சாமிர்தம், பன்னீர், தேன், உள்ளிட்ட திரவிய பொடிகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரதோஷ வழிபாடு செய்தனர்.

Previous articleஏழுமலையான் கோவில் வருடாந்திர வசந்த உற்சவம் துவக்கம்!! 
Next articleமுரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் செயல்படுவதாக கூறி தேசிய பட்டியலின ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்!! வேறு நீதிபதிக்கு மாற்ற உத்தரவு!!