அம்மா உணவகங்களில் முற்றிலும் இலவசம்!! முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!

Photo of author

By Rupa

DMK: அம்மா உணவகங்களில் இரு தினங்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே தமிழகத்தில் அதிக பாதிப்பை சந்திக்கும் முக்கிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மஞ்சள் அலர்ட்  கொடுத்துள்ளனர். அந்த வகையில் சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வருகிறது.

மக்களுக்கு இந்த பேரிடரில் அடிப்படை தேவை அனைத்தும் கிடைக்க வேண்டுமென பால் மற்றும் சில அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் இருக்கும்படி தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் இந்த இரு தினங்களில் பாதிப்பானது அதிக அளவிலிருக்கும் என்பதால் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது அதிமுகவின் அனைத்து திட்டங்களையும் முடுக்க வேண்டுமென நினைத்த பொழுது அம்மா உணவகத்தை தான் முதலில் சூறையாடினர். இதற்கு திமுக அமைச்சர்களும் ஆதரவு அளித்தனர். இவ்வாறு இருக்கையில் தற்பொழுது அந்த திட்டம் செயலில் இருக்கவே மக்களின் பேரிடர் நேரத்தில் அவர்களின் பசியாற்ற பயன்படுகிறது.