அசம்பாவிதம் இல்லாத நிலை! சுட்டு வீழ்த்திய ஜம்மு படையினர்!

0
159
Absolutely non-existent! Jammu soldiers shot dead!
Absolutely non-existent! Jammu soldiers shot dead!

அசம்பாவிதம் இல்லாத நிலை! சுட்டு வீழ்த்திய ஜம்மு படையினர்!

எல்லையில் கடந்த சில நாட்களாகவே ஆளில்லாத விமானங்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. முதலில் வந்த ஆளில்லா விமானம் சுட்டதில் இரண்டு விமான படையினர் உயிரிழந்த நிலையில், அதன் பிறகு மீண்டும் வந்த விமானத்தை நமது படைவீரர்கள் சுட்டனர்.

உடனே அந்த விமானம் திரும்பி சென்று கண்ணுக்கு தெரியாமல் மறைந்தே போனது. இந்நிலையில் தற்போது மீண்டும் வந்த மூன்றாவது விமானத்தில், வெடி பொருட்களை வைத்து தாக்குதல் நடத்த எதிரி நாட்டு படையினர் சதி திட்டம் தீட்டி உள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஜம்முவின் கன்சுக் பகுதியில் உள்ள சம்பா சர்வதேச எல்லையில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் உடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த ஒரு ஆளில்லா விமானத்தை போலீசார் நேற்று அதிகாலையில் சுட்டு வீழ்த்தினார்கள். இந்திய பகுதிக்குள் 8 கிலோமீட்டர் தூரம் பறந்து வந்த அந்த ஆளில்லா விமான தாக்குதல், நடத்துவதற்காக கீழே இறங்கிய போது அதனை போலீசார் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

அந்த ஆளில்லா விமானத்தில் 5 கிலோ எடையுடைய வெடிபொருட்கள் இணைக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது. மேலும் அது சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் பெரும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. அந்த வெடிப்பொருட்களை கைப்பற்றி, அவை எங்கு தயாரிக்கப்பட்டவை என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஆடிப் பெருந்திருவிழா! மோகினி திருக்கோலத்தில் காட்சி அளித்த கள்ளழகர்!
Next articleஏ.ஆர்.ரஹ்மானிடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு!! ரசிகர்கள் கொந்தளிப்பு!!