ஆடிப் பெருந்திருவிழா! மோகினி திருக்கோலத்தில் காட்சி அளித்த கள்ளழகர்!

0
82

பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்றான மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் வருடம் தோறும் ஆடி தெரு திருவிழா பிரசித்தி பெற்றதாக சொல்லப்படுகிறது. நோய்த் தொற்று பரவல் காரணமாக, ஆடி மாத பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை அழகர் கோவில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் அனுமதி இல்லாமல் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

11 தினங்கள் நடைபெறும் ஆடிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கொடியேற்றம் 16ஆம் தேதி நடைபெற்றது நோய் தொற்று பரவல் காரணமாக, காலை 9 மணிக்கு மேல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதோடு நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் 9 மணி வரையில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்தது.

அழகர்கோவிலில் நடைபெறும் ஆடிப் பெருவிழாவின் நான்காம் நாளான கடந்த 19ஆம் தேதி கருட வாகனத்தில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆடிப் பெருவிழாவின் ஐந்தாம் நாளான 20ம் தேதி அன்று மோகினி திருக்கோலத்தில் கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் சாமியை தரிசனம் செய்தார்கள்.