ரஜினியின் சிஏஏ கருத்துக்கு திடீரென ஆதரவு தெரிவித்த இஸ்லாமிய அமைப்பு: ஆச்சரிய தகவல்

0
188

சமீபத்தில் ரஜினிகாந்த் அளித்த பேட்டியின் போது இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தினால் தானே முதல் ஆளாக நின்று குரல் கொடுப்பதாகவும் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்

ரஜினியின் இந்த பேட்டிக்கு இஸ்லாமிய அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர் இந்த நிலையில் இஸ்லாமிய அமைப்பினர்களை நேரடியாக சந்தித்து பேசி தனது தரப்பு விளக்கத்தை அளிக்க ரஜினிகாந்த் முடிவு செய்து முதல் கட்டமாக தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் அவர்களை இன்று காலை ரஜினிகாந்த் சந்தித்தார்

இந்த சந்திப்பு முடிந்த பின்னர் அபுபக்கர் செய்தியாளர்களிடம் பேசியபோது ’ரஜினிகாந்தின் சிஏஏ கருத்தை உள்நோக்கத்தோடு எடுக்கக் கூடாது என்றும் அவர் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் குரல் கொடுப்பேன் என்று கூறியதற்கு நன்றி என்றும் கூறினார் மேலும் ரஜினிகாந்த் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே சூப்பர் ஸ்டார் என்று புகழாராம் சூட்டினார்.

ஒரே ஒரு சந்திப்பில் அவர் திடீரென மாறியது எப்படி என்று செய்தியாளர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர் ஆனால் அதே நேரத்தில் ரஜினி உடனான சந்திப்பில் நடந்த பேச்சுவார்த்தை விபரம் குறித்து அவர் தெரிவிக்க மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது

Previous articleமிஷ்கினோடு மோதல்:இயக்குனர் அவதாரம்! மனம் திறந்த விஷால் !
Next articleராஜ்யசபா சீட் இல்லை: தேமுதிகவுக்கு கைவிரித்தது அதிமுக