வேகமெடுக்கும் கொரோனா! அச்சமூட்டும் ஆக்சிஜன் பற்றாக்குறை!

0
178
Accelerated corona! Frightening lack of oxygen!
Accelerated corona! Frightening lack of oxygen!

வேகமெடுக்கும் கொரோனா! அச்சமூட்டும் ஆக்சிஜன் பற்றாக்குறை!

கொரோனா 2-ம் தொற்றானது அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது. அந்தவகையில் டெல்லி,குஜராத்,மகராஷ்டிரா,தமிழ்நாடு போன்றவற்றில் அதிக அளவு கொரோனா தொற்று வருகிறது.கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.இருப்பினும் தொற்று பரவுவது குறையவில்லை.அதனால் பல மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.

அந்தவகையில் இன்று முதல் நமது தமிழ்நாட்டில் அனைத்து கடைகளும் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளித்துள்ளனர்.இந்த நடை முறையானது  நாளை முதல் அமலுக்கு வருகிறது.இவ்வாறு பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருவதால் அடுத்ததாக நமது இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது,அந்தவகையில் தமிழ்நாட்டில் ஓர் நாளில் மட்டும் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 23,286 ஆக உள்ளது.ஓர் நாளில் மட்டும் சென்னையில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,291 ஆக உள்ளது.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,28,311 ஆக உள்ளது.அதேபோல குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 20,062 ஆக உள்ளது.தினந்தோறும் சுகாதாரத்துறை அமைச்சகம் கொரோனா பட்டியலை வெளியிடும்.அதில் 24 மணி நேர கணக்கின்படி தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 167 ஆக உள்ளது.அரசு மருத்துவமனைகளில் 94 பேரும்,தனியார் மருத்துவமனைகளில் 74 பேரும் கொரோனா தொற்றின் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.அதுமட்டுமின்றி தற்போது இந்தியா முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு அதிகமக உள்ளது.

நேற்று சென்னையிலுள்ள செங்கல்பட்டில் 11 பேர் ஆக்சிஜன் இன்றி உயிரிழந்துள்ளனர்.இவற்றை கட்டுப்படுத்த தனியார் மதுத்துவமனைகளுடன் சேர்ந்து மாநகராட்சி,ஆக்சிஜன் பேருந்தை உருவாக்கியுள்ளனர்.இதில் நோயாளிகள் உட்கார்ந்துக்கொன்டே ஆக்ஸிஜனை பயன்கொடுத்திகொள்ளுமாறு வசதியை மேற்கொண்டுள்ளனர்.இவ்வாறு அதிக அளவு தொற்று பரவுமாயின் இந்தியாவில் முழு ஊரடங்கு போடப்படும்.

Previous articleதமிழகத்தின் முக்கிய நபருக்கு ஏற்பட்ட நோய்த்தொற்று! அதிர்ச்சியில் முக்கிய கட்சி தலைவர்கள்!
Next articleஓ.டி.டி தளத்தில் படங்கள் ரிலீஸ்!தயார் நிலையில் ரசிகர்களா?