ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்து!! நிலைகுலைந்து போன படக்குழு!!

Photo of author

By CineDesk

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்து!! நிலைகுலைந்து போன படக்குழு!!

தமிழ் திரையுலகின் பல முன்னணி நடிகர்கள் வலம் வருகின்றனர். அவர்களின் ரசிகர்களின் மத்தியில் அவர்களுக்கு என தனி அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளனர். இந்த நிலையில் நடிகர்கள் கடுமையான படபிடிப்பின் போது தங்களை வருத்திக்கொண்டு தனது ரசிகர்களுக்காக முழு முயற்சியில் நடித்து படத்தின் வெற்றிக்காக போராடுகின்றனர். இந்த வகையில் நடிகர் அஜித் கூட தான் நடிக்கும் சண்டை காட்சிகளில் எந்த ஒரு டூப்பையும் ஈடுபடுத்தாமல் தானே சண்டை காட்சிகளில் நடிப்பார். மேலும் அதனால் அவருக்கு பல காயங்கள் மற்றும் பல முறிவுகள் ஏற்படும். அவர் இது வரை பல ஆபரேஷன்களை செய்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் விஷால் நடிப்பில் அண்மையில் சக்ரா திரைப்படம் வெளியாகி உள்ளது. இவர் இதுவரை தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குனர்களின் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இவரின் சில படங்கள் சினிமாவின் வெற்றிப்படமாக மாறியுள்ளது. இவர் நடிகர் சங்க துணைத் தலைவராக இருந்து வருகிறார். இதை தொடர்ந்து நடிகர் விஷால் மற்றும் சாக்கோ பாய் ஆர்யா நடிப்பில் எனிமி என்ற திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது. அதன் படப்பிடிப்பு முடிந்து உள்ளநிலையில் அந்த படம் எப்போது வெளியாகும் என படக்குழு இதுவரை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் நடிகர் விஷால் தனது 31வது படத்திற்காக சில மாதங்களாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு உள்ளார். மேலும் நடிகர் விஷாலுக்கு அவரது 31-வது படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்கனவே அடிபட்டு முதுகில் காயம் ஏற்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்பிலும் அதே இடத்தில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு விஷால் நன்றாக இருப்பதாகவும் படக்குழு கூரியுள்ளது. மேலும் இதை கண்டு விஷாலின் ரசிகர்கள் அவரின் டெடிகேஷனை கண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளனர். மேலும் உடல் நலனை பார்த்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தியுள்ளனர்.