செல்போனை பார்த்து கொண்டே தண்டவாளத்தில் விழுந்த நபர்: வைரலாகும் வீடியோ
செல்போனை பார்த்துக்கொண்டே பிளாட்பாரத்தில் நடந்து சென்ற ஒருவர், திடீரென தண்டவாளத்தில் விழுந்த பின்னர் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த சிசிடிவி வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அர்ஜெண்டினா நாட்டின் தலைநகர் பியூனஸ் ஐரஸ் என்ற பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் சமீபத்தில் ஒருவர் செல்போனை பார்த்து கொண்டே பிளாட்பாரத்தில் நடந்து சென்றார். அப்போது எதிர்பாராத வகையில் அவர் திடீரென தண்டவாளத்தில் தவறி விழுந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனே அவரை காப்பாற்றினர். அந்த நேரத்தில் ரயில்கள் ஏதும் வராததால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
வாகனங்கள் ஓட்டும்போதும், நடந்து செல்லும்போதும் செல்போன்களை பயன்படுத்த வேண்டாம் என பலமுறை அறிவுறுத்தப்பட்டும் பலர் அதனை கண்டுகொள்ளாமல் இருப்பதால் இதுபோன்ற விபத்துக்கள் அதிகம் நிகழ்கின்றன. செல்போனால்தான் பொது இடங்களில் அதிக விபத்துக்கள் நடப்பதாக ஆய்வுகள் கூறிவரும் நிலையில் இதுகுறித்து விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.