பனிமூட்டம் காரணமாக நடைபெற்ற கோர விபத்து! 3 பேர் பரிதாப பலி!

Photo of author

By Sakthi

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அருகில் இருக்கின்ற சிறுகளத்தூர் மேல தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி வாட்டர் சர்வீஸ் வைப்பதற்காக திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பகுதியில் உறவினர் மூலமாக இடத்தை தேர்வு செய்து இருக்கிறார்.

அதோடு இதற்கான பொருட்களை சென்னையில் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்த அவர், பணத்தை எடுத்துக்கொண்டு காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் இருக்கின்ற தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி விட்டு அதன்பிறகு பேர் வேலூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் இருக்கின்ற உறவினரை சந்திப்பதற்காக சென்றார்.

அதனடிப்படையில் சுந்தரமூர்த்தி சிறுகளத்தூர் பகுதியை சார்ந்த தன்னுடைய நண்பர் சரவணன் மற்றும் செல்வம் உள்ளிட்டோருடன் அரியலூர் பகுதியிலிருந்து ஓரிக்கைக்கு காரில் சென்று கொண்டிருந்ததாக சொல்ல படுகிறது. காரை சரவணன் ஓட்டி சென்றதாக சொல்லப்படுகிறது, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பெருநகர் அருகே சென்று கொண்டிருந்த சமயத்தில் அதிகாலையில் பனி மூட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாக, எதிரில் வந்த வேன் மீது இவர்களுடைய கார் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் அந்த காரில் பயணம் செய்த சுந்தரமூர்த்தி, செல்வம், சரவணன், உள்ளிட்ட 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். விபத்துக்குள்ளான வேனில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்வதற்காக வந்த 13 பெண்கள் ,3 ஆண்களில் ஒரு சிலருக்கு மட்டும் லேசான காயம் உண்டானது.

அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்கள் .
இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த பெருநகர் காவல்துறையை சேர்ந்தவர்கள் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.