கார் ரேசின் போது ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால் விபத்து!! பிரபல நடிகையின் அதிர்ச்சி காணொளி!!

Photo of author

By CineDesk

கார் ரேசின் போது ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால் விபத்து!! பிரபல நடிகையின் அதிர்ச்சி காணொளி!!

நிவேதா பெத்துராஜ் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டில் வெளியான ஒரு நாள் கூத்து என்னும் தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு முதல் முதலில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத் தமிழன் போன்ற பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

இவர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் பிறந்தார். இவர் தந்தை பெயர் பெத்துராஜ். அவர் ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கான ரசிகர் கூட்டமே உள்ளது. இவர் தமிழில் விஜய் சந்தர் இயக்கிய விஜய் சேதுபதி நடித்த முக்கிய திரைப்படமான சங்கத் தமிழன் திரைப்படத்தில் நடித்த பிறகு மேலும் பிரபலமடைந்தார்.

இதை தொடர்ந்து இவர் திரைப்படங்களில் மட்டுமின்றி நடிகர் அஜித்தை போலவே கார்ரேஸ் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவர் ஃபார்முலா ரேஸ் கார் பயிற்சியில் தனது level-1 தகுதியையும் முடித்திருந்தார். இந்த நிலையில் நிவேதா பெத்துராஜ் தற்போது அவரின் ரேஸ் கார் பயிற்சியின் பொழுது திடீரென ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து உள்ளது.

https://www.instagram.com/p/CSL6c6Wlgro/?utm_source=ig_web_button_share_sheet

அதனால் அவர் கட்டுப்பாட்டை இழந்து டிராக்கில் மாறியுள்ளார். இந்த வீடியோ பின் வந்த நண்பரின் காரில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவை நிவேதா பெத்துராஜ் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.bமேலும் அந்த பதிவில் என் பின்னால் வந்த என் தம்பியின் கோபுரோ கேமராவில் சிக்கியது. அது பாதையில் என்னை கசிந்தது காரை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் இந்த காட்சியை பதிவு செய்ததற்கு நன்றி என்று கூறியுள்ளார்.