விருதுநகர் மாவட்டத்தில் கோர விபத்து!! குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!!

Photo of author

By Jayachithra

விருதுநகர் மாவட்டத்தில் கோர விபத்து!! குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!!

Jayachithra

Updated on:

accident-in-virudhunagar-district

விருதுநகர் மாவட்டத்தில் கோர விபத்து!! குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!!

திருமங்கலம் அருகே அதிவேகத்தில் தாறுமாறாக ஓடிய கார்,தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில்,ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை,வில்லாபுரம் ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்தவர் கனகவேல். மதுரை பஜாரில் செல்போன் கடை நடத்தி வந்த இவர்,தனது மனைவி,மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு காரில் சென்றுவிட்டு,மீண்டும் மதுரைக்கு திரும்பியுள்ளார்.

விருதுநகர்–திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் அதிவேகத்தில் வந்த கார், எதிர்பாராதவிதமாக தடுப்புகள் மீது மோதி உரசி விபத்துக்குள்ளானது. அப்போது,இருசக்கர வாகன ஓட்டி ஒருவரும்,கார் மோதியதில்  உயிரிழந்தார்.   நிலைதடுமாறிய கார் நான்கு வழிச்சாலை தடுப்புகள் மீது மோதி சினிமா காட்சியில் வருவதைப் போல நான்கு டிராக்குகளைக் கடந்து அந்தரத்தில் பறந்து விழுந்துள்ளது. 

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த கனகவேல்,உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்,விபத்தில் சிக்கிய மேலும் சிலரை மீட்டு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஓட்டுனர் அரை தூக்க நிலையில் காரை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.விபத்து குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தரத்தில் பறந்து கவிழந்த கார் இன்னும் 10 அடி தாண்டி விழுந்திருந்தால் அங்கிருந்த டீக்கடையில் டீ குடித்து கொண்டிந்தவர்கழும் விபத்தில் சிக்கியிருப்பர். இதனால் கடையில் டீக்குடித்து கொண்டிருந்த  10 பேர் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.சாலை விபத்து சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.