TVK : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில் எந்த கட்சி ஆட்சி பிடிக்க போகிறது என்ற கேள்வி மக்கள் மத்தியில் பெரும்பான்மையாக உள்ளது. அந்த வகையில் அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டு வைத்துக் கொண்டது. மேற்கொண்டு திமுக கூட்டணி கட்சிகளும் வலிமையாக இருக்கிறது. இப்படி உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை வாய்ந்த கட்சி ஆதரவு ஏதுமில்லை.
ஆனால் அதிமுக, பாஜகவுடன் திமுகவை வீழ்த்துவதற்கு மட்டுமே தான் கூட்டணி வைத்துள்ளோம், கொள்கை அடிப்படையில் வேறு தான் எனக் கூறுகின்றனர். இதனை காரணமாக வைத்து தனி அணி அமைத்து திமுக அதிருப்தி நிறைந்த கட்சிகளை ஒன்று சேர்க்க வேண்டுமென திட்டமிட்டுள்ளார். அதேபோல மும்பை தனியார் நிறுவனம் ஒன்று வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் யார் ஆட்சியை பிடிப்பார் என்பது குறித்து கணக்கெடுத்துள்ளது.
இதில் பெரும்பான்மையாக விஜய்-க்கு தான் ஓட்டு விழுந்து உள்ளதாம். இந்த முடிவானது ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. திமுக அதிமுக என யாருக்கும் பெரும்பான்மையான ஆதரவு இந்த சர்வேவில் கிடைக்கவில்லையாம். அதுமட்டுமின்றி வன்னியர் சமூகத்தினர் பாமக மீதே ஆதரவு கொடுக்க விரும்பவில்லையாம். அவர்களின் ஆதரவு முழுவதும் விஜய்-யை நோக்கி உள்ளதாக கூறுகின்றனர்.
ஆனால் இதனை முழுவதுமாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி மறுக்கிறதாம். எப்படி சாதியவாரிய கட்சி தங்களின் அங்கீகாரத்தை மதிக்காமல் போகும் என்று கேள்வி எழுப்பு வருகின்றனர்?? இவ்வாறு இருக்கையில் தற்போது இந்த சர்வே வெளியானதையடுத்து எடப்பாடி தீவிர ஆலோசனை செய்துள்ளார். எப்படியாவது தனி அணி மூலம் விஜய்யை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளாராம். இதற்காக பாஜக ஆதரவு இல்லாத பொது முகங்கள் கொண்டு தவெக மூத்த நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.