வாஸ்து படி செருப்பை வீட்டில் எந்த இடத்தில் விட வேண்டும் தெரியுமா.. இதை மட்டும் செய்தால் இனி பண மழை தான்!!
நமது இந்து கலாச்சாரமானது மற்றதை காட்டிலும் மிகவும் அற்புதமான ஒன்று என்றே கூறலாம். ஒரு கட்டிடம் கட்டுவது வீடு கட்டுவது என அனைத்திலும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் வகையில் வாஸ்து சாஸ்திரம் பார்ப்பதுண்டு. அந்த வகையில் நாம் வீட்டில் விடும் செருப்பு முதற்கொண்டு அந்தந்த சாஸ்திரப்படி இருந்தால் அதிகப்படியான நன்மைகள் உண்டாகும். அந்த வகையில் வீட்டில் தவறான முறையில் செருப்புகளை விடும் பட்சத்தில் அது நமக்கு எதிர்மறை ஆற்றலை தேடி கொடுக்கும்.
இதனையெல்லாம் தவிர்க்க வாஸ்து சாஸ்திரப்படி காலணிகளை எந்த இடத்தில் விட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்:
நாம் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பியவுடன் கை கால்களை அலம்பும் பொழுது செருப்பையும் கழுவுவதுண்டு.
அவ்வாறு கழுவிய செருப்பை தலைகீழாக வைக்க கூடாது. இவ்வாறு வைப்பதால் நமது வீட்டில் எதிர்மறை சக்தியை உண்டாக்கும்.
சூரியன் உதைக்கும் கிழக்கு திசை மேலும் வடக்கு திசைகளில் செருப்புக்களை விடக்கூடாது. அதுமட்டுமின்றி அவ்வாறு விடுவதால் அன்னலட்சுமி மிகவும் கோபத்திற்குள்ளாவர் என்று ஆன்மீக ரீதியாக கூறுகின்றனர்.
மேற்கொண்டு இதன் விளைவாக நமது வீட்டில் பொருளாதார பிரச்சனைகள் அதிகரிக்க கூடும்.
இதனையெல்லாம் தவிர்க்க செருப்பு மற்றும் அதன் அலமாரியை தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் வைப்பது நல்லது.
அதேபோல வாசலில் மையத்தில் செருப்புகளை கழட்டுவதையும் தவிர்க்க வேண்டும். இதனையெல்லாம் பின்பற்றும் பட்சத்தில் நமது வீட்டில் சுபக் கடாட்சம் உருவாகுவதோடு நேர்மறை ஆற்றல் அதிகரிக்கக்கூடும். இதனால் குடும்பத்தில் ஏற்படும் சண்டை பொருளாதாரத்தில் மாற்றம் உள்ளிட்டவைகளை பார்க்க முடியும்.