வாஸ்துவின்படி இந்தத் திசையில் காலண்டரை மாட்டினால் வீட்டில் லட்சுமி குடி வந்துருவாங்களாம்!

Photo of author

By Gayathri

பொதுவாக, காலண்டர் இல்லாத வீடே கிடையாது. ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தது 1 காலண்டர் ஆவது இருக்கும். இது நமக்கு முக்கியமான தேதிகளைக் குறித்து வைத்துக் கொள்ள உதவுகின்றது. ஆனால், இந்த காலண்டரைக் குறிப்பிட்ட திசையில்தான் மாட்ட வேண்டும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

வாஸ்துவின்படி, ஒரு காலண்டரை மாட்டுவதற்கான திசையை கவனிப்பது மிகவும் அவசியமாகும். அது ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் உறுதி செய்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல், வீட்டில் பழைய காலண்டர் இருந்தால் முன்னேற்றப் பாதைகளில் தடைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. வீட்டில் ஒரு காலண்டரை மாட்டுவதற்குமுன் என்னென்ன விஷயங்களைப் பார்க்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

வாஸ்துவின்படி, காலண்டரை வீட்டின் தெற்குச் சுவரில் மாட்டக்கூடாது. மாட்டினால் முன்னேற்றப் பாதைகளில் சில தடைகள் ஏற்படும். அது மட்டும் இல்லாமல், குடும்பத் தலைவரின் ஆரோக்கியத்திற்கு எதிர்மறைத் தாக்கங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

காலண்டரைக் கதவுக்கு முன்னோ, பின்னோ மாட்டக்கூடாது. இதனால், குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றப் பாதைகளில் தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

காலண்டரைக் கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் வைப்பது குடும்பத்தில் நன்மைகள் ஏற்படும். இதனால், வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் உருவாகும். அதுமட்டுமில்லாமல், வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். மேலும், பழைய காலண்டர்களை வீட்டில் வைப்பது ஒவ்வொரு வகையிலும் தடைகளை உண்டாக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

வாஸ்துவின்படி, கிழக்குத் திசையானது சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இந்தத் திசையில் சூரியக் கடவுளுக்கு ஏற்ற நிறங்களான இளஞ்சிவப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிற கேலண்டர்களை வைப்பது வீட்டிற்குப் பல நன்மைகள் தரும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.