வாஸ்து சாஸ்திரப்படி மனைவி கணவன் மனைவி இப்படித்தான் உறங்க வேண்டும்!!

Photo of author

By Divya

கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவு ஏற்படாமல் இருக்க வேண்டியது மிக மிக முக்கியமான ஒன்று.கணவன் மனைவி ஒற்றுமை குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பானதாக்கும்.ஒவ்வொரு தம்பதியரும் தங்கள் உறவை வலுப்படுத்த பல முயற்சிகளை செய்கின்றனர்.

ஆனால் கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இல்லையென்றால் உறவை காப்பாற்ற முடியாமல் விவாகரத்தில் வந்து முடியும்.இப்படி கணவன் மனைவி சண்டை அதிகரிக்க சாஸ்திரப்படி சில காரணங்கள் சொல்லப்படுகிறது.

கணவன்-மனைவி இடையே சண்டை அதிகரிக்க முக்கிய காரணம் படுக்கை அறை தான்.வாஸ்து சாஸ்திரப்படி படுக்கை அறையில் இரட்டை கட்டில் இருக்கக் கூடாது.அதேபோல் படுக்கை அறையில் கிழிந்த படுக்கை விரிப்பை பயன்படுத்தக் கூடாது.இவற்றை விட கணவன் மனைவி எப்படி உறங்க வேண்டும் என்பது தான் முக்கியமான ஒன்று.

சாஸ்திரப்படி மனைவி கணவனின் இடது பக்கத்தில் தான்படுத்து உறங்க வேண்டும்.சிவனின் இடது பக்கம் பார்வத்துக்காக ஒதுக்கப்பட்டது.இதன் காரணமாகவே இந்து மதத்தில் கணவனின் இடது பக்கத்தில் மனைவி படுக்க வேண்டுமென்று சொல்லப்படுகிறது.

இவ்வாறு மனைவி கணவனின் இடது பக்கத்தில் படுத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.கணவனின் இடது பக்கத்தில் மனைவி தூங்கினால் சண்டை ஏற்படாமல் அன்யோன்யம் அதிகரிக்கும்.திருமணம்,யாகம் போன்ற சுப காரியங்களில் மனைவி கணவனின் வலது பக்கத்தில் அமர வேண்டும்.அதேபோல் லௌகீக வேலையில் கணவனின் இடத்தில் பக்கத்தில் மனைவி இருக்க வேண்டுமென்று சாஸ்திரம் சொல்கிறது.