நூற்றுக்கும் மேற்ப்பட்ட போலீசார்கள் குவிப்பு! புதம்பம் வெடிக்குமா?

0
121
Accumulation of more than one hundred policemen! Will Mercury Explode?
Accumulation of more than one hundred policemen! Will Mercury Explode?

மெரினா கடற்கரையில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட போலீசார்கள் குவிப்பு! புதம்பம் வெடிக்குமா?

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி படித்து வந்துள்ளார். பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவி  கடந்த 13 ஆம் தேதி பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையே கடந்த மூன்றாம் நாட்களாக வாட்ஸ்-அப் உள்ளிட்ட சில சமுக வலைதளங்களில் மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று கூறி பல்வேறு கருத்துகள் எழுப்பப்பட்டது.

இதன் மூலமாக நேற்று முன்தினம் மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்பினர் கனியாமூர் பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் இது பெரும் கலவரமாக வெடித்தது.மேலும் பள்ளிக்கு மற்றும் பள்ளி வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இதனால் பள்ளி வளாகம் போர்க்களமாக காட்சியளித்தது.இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தொடர்பாக மெரினாவில் ஏராளமானோர் கலவரத்தில் ஈடுபடுவதாக சமூக வலைதளங்கள் மூலம் தகவல் பரவியது.

அதன் படி போராட்டம் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு வருகிறது. கலங்கரை விளக்கம் முதல் தலைமைச் செயலகம் வரை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சமூக வலைதளங்கள் மூலம் தகவல் பரப்பிய 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த தகவல் உண்மையா இல்லை புரலையா என மேற்கொண்ட விசாரணை முடிவில் தெரிய வரும்.

Previous articleதன்னைப் போலவே இருக்கும் செக்ஸ் பொம்மையை கணவனுக்குப் பரிசளித்த மனைவி!
Next articleஇயக்குனர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதி!