கலைத்திருவிழாவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சாதனை.. பழமை மாறாத கலை!! 

Photo of author

By Rupa

கலைத்திருவிழாவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சாதனை.. பழமை மாறாத கலை!! 

Rupa

Updated on:

கலைத்திருவிழாவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சாதனை.. பழமை மாறாத கலை!!

தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் மூலம் அரசு பள்ளி மாணவர்களின் தனி திறமைகளையும், குழு திறமைகளையும் ஊக்குவிக்கும் வகையில் (2022 – 2023 கல்வி ஆண்டுக்கான) கலைத்திருவிழா எனும் பெயரில் பல்வேறு விதமான போட்டிகளை அறிவித்து அந்தப் போட்டிகள் மாணவர்களுக்கு இடையே பள்ளி அளவிலும், பள்ளிகளுக்கு இடையே வட்டார அளவிலும், வட்டாரங்களுக்கு இடையே மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தி அதில் தேர்வான மாணவர்களுக்கு மாநில அளவில் போட்டிககளை தமிழக அரசு நடத்தியது.

இந்த போட்டியில் தொண்டி செய்யது முகம்மது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 வகுப்பு பயிலும் மாணவன் எஸ்.ஏ.அபிசேக் ஆனந்தன் பண்டையகால காற்றிசை கருவிகள் ஒலிக்கும் பிரிவில் சங்கொலி எழுப்பும் போட்டியில் கலந்து கொண்டார். சங்கொலியினை வழிபாடு சங்கொலி, யுத்த சங்கொலி, இறுதிச் சடங்கில் சங்கொலி என்று மூன்று முறைகளில் ஒலியெழுப்பி மாநில அளவில் முதலிடத்திற்கு தேர்வாகியுள்ளார்.

மாநில அளவிலான இந்த இறுதி கட்ட போட்டி கடந்த 28.12.2012 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான பரிசும், கலையரசன் என்ற பட்டமும், சான்றிதழும் வரும் ஜனவரி 11,12.2023 அன்று சென்னையில் முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளது.

மேலும் மாநிலத்தில் முதலிடத்திற்கு தேர்வாகியுள்ள எஸ்.ஏ.அபிசேக் ஆனந்தன் இராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்க மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் கலந்து மாவட்ட அளவிலான சப்ஜூனியர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று நடப்பு மாவட்ட சாம்பியனாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.