50+ வயதிலும் இளமை தோற்றத்தை அடையலாம்!! இந்த டிப்ஸ் மட்டும் ரெகுலரா பாலோ பண்ணுங்கள்!!
இளமை சருமத்துடன் வாழ வேண்டும் என்பது பல பெண்களின் கனவாக உள்ளது.ஆனால் வாழ்க்கை முறை மாற்றத்தால் 30+ வயதிலேயே மெல்ல மெல்ல முதுமையை அடைந்து விடுகின்றனர்.
சிறு வயதிலிருந்தே சருமத்தை ஆரோக்கியமான முறையில் பராமரித்து வந்தால் வயதான பின் ஏற்படும் சரும சுருக்கம் வராமல் இருக்கும்.ஆனால் பெண்கள் பலர் கெமிக்கல் நிறைந்த அழகு சாதனங்களை சருமத்திற்கு பயன்படுத்தவதால் தங்கள் அழகை மேலும் கெடுத்துக் கொள்கின்றனர்.
சருமத்தில் படிந்து கிடக்கும் மாசு,மேக்கப் விரைவில் முதுமை தோற்றத்தை கொடுத்து விடும்.எனவே இளமை தோற்றத்துடன் பளபளப்பாக இருக்க சில எளிய பயனுள்ள டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
டிப் 01:-
தினமும் காலையில் எழுந்ததும் சுத்தமான குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.காலையில் எழும் பொழுது புன்னகையுடன்,நல்ல நிகழ்வுகளை நினைத்து கொண்டு எழுந்தால் முக அழகு தானாக கூடும்.
டிப் 02:-
சருமத்திற்கு சோப்,க்ரீம் பயன்படுத்துவதை விட இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது நல்லது.வேப்பிலை பேஸ்ட்,சந்தன பேஸ்ட் பயன்படுத்தலாம்.
டிப் 03:-
பீட்ரூட்,பப்பாளி அல்லது கேரட் அரைத்து முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்.
டிப் 04:-
குளியல் பொடி தயாரித்து அதை பயன்படுத்தி குளித்து வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.