நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் என திரையுலகில் பன்முகங்களை கொண்ட ஒருவர் தான் பிரபுதேவா அவர்கள். இவரை இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றும் அழைப்பர்.
இப்படிப்பட்ட பிரபுதேவாவின் உடைய படமான ஜாலியோ ஜிம்கானா நவம்பர் 22 ஆம் தேதி அன்று தமிழ் திரையரங்குகளில் வெளியானது. சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படமானது 1994 ஆம் ஆண்டு வெளியான மகளிர் மட்டும் திரைப்படத்தின் கதையை மையமாக வைத்து எடுத்தப்படமாக அமைந்திருக்கிறது.
இப்படத்தில், முழுக்க முழுக்க பிளாக் காமெடி கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் பிரபு தேவா உடன் இணைந்து மடோனா செபாஸ்டியன், அபிராமி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரோபோ சங்கர், ஒய் ஜி மகேந்திரன், ஜான் விஜய் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர். தென்காசியில் பிரியாணி கடை நடத்தி வரும் 4 பெண்கள் ஒரு பிணத்தை(பிரபு தேவா) கைப்பற்றி கொடைக்கானலுக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
மகளிர் மட்டும் திரைப்படத்தில் நாகேஷ் ஒரு பகுதியில் மட்டும் பிணமாக நடித்திருப்பார். ஆனால், இப்போது அதை மிஞ்சும் அளவிற்கு நடிகர் பிரபு தேவா தன்னோட நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் சாதனை படைத்துள்ளார்.
உண்மையில், இறந்தவர் போன்று பிணமாக அதுவும் டிராவல் பண்ணிக் கொண்டே இருக்க வேண்டும். பிணமாக 110 நிமிடம் நடித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.