புளியந்தோப்பு கட்டிடம் தொடர்பாக 2 பொறியாளர்கள் மீது நடவடிக்கை! வசமாக சிக்கும் ஓபிஎஸ்!
தற்பொழுது திமுக ஆட்சி அமர்திய நாள் முதல் பல்வேறு முறைகளில் அதிமுக செய்த ஊழல்கள் அனைத்தையும் வெளிக்கொண்டு வருகிறது.இதனை தமிழக கட்சிகள் அனைத்தும் திமுக பத்தாண்டுகள் ஆட்சியில் இல்லாத காலத்தில் அதிமுக,திமுகவுக்கு செய்ததை பதிலடியாக வட்டியும் முதலுமாக தற்போது திமுக அதிமுக விற்கு தந்து வருகிறது என்று விமர்சித்து வருகின்றனர்.அந்தவகையில் தற்பொழுது முன்னாள் அதிமுக அமைச்சர்களிடம் லஞ்சம் ஊழல் துறையினர் சோதனை நடத்தி பல கோடி மதிப்பிலான ஆணவங்கள் கைப்பற்றபட்டது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி அப்போது முன்னாள் முதொல்வர் எடப்பாடி பழனிசாமி எங்களை பழிவாங்கும் நோக்கை விட்டுவிட்டு நீங்கள் கூறிய அறிக்கைகளை முதலில் நிறை வேற்றுங்கள் என செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அந்தவகையில் பார்க்கும் போது திமுக உறுதியாக ரிவென்ஜ் தான் எடுத்துள்ளது என்று கூறுவது உண்மை போலவே புலன்படுகிறது.தற்பொழுது திமுக சட்டமன்ற பேரவை கூட்டம் நடைபெற்றது.இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கூட்டத்தில் கூறியது,புளியந்தோப்பு பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பாக இரண்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டது.
அந்த கட்டிடங்கள் கடந்த அதிமுக ஆட்சியின் போது கட்டப்பட்டது.அதுமட்டுமின்றி அந்த குடிசை மாற்று வாரியம் சார்பாக கட்டிடங்கள் தற்பொழுது தொட்டாலே உதிரும் நிலையில் தான் உள்ளது.கடந்த ஆட்சியில் தொட்டா சிணுங்கி போன்று தொட்டாலே உதிரும் சிமென்ட் கண்டுபிடித்தவர் அதிமுக தான் என்று கிண்டல் அடித்தார்.மேலும் இம்மரியான சிமென்ட் போட உறுதியளித்தவர்,இந்த கட்டிடம் கட்டிய நிறுவனம் இதற்கு பின்னால் யாரெல்லாம் உள்ளார்கள் என அனைவரின் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.அதிமுக ஆட்சியின் போது இந்த துறையில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் இருந்தார்.அவர் மீதும் கிரிமினல் வழக்கு தொடக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதுமட்டுமின்றி அந்த கட்டிடம் குறித்து ஐ.ஐ.டி நிறுவனத்திடம் ஆய்வறிக்கைக்கும் கொடுத்துள்ளார்.இந்த கட்டிடம் தரமற்றதாக தான் கட்டப்பட்டுள்ளது என்று ஆய்வறிக்கை கூறுமாயின் உறுதியாக அனைவரின் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேட்டுக்கொண்டார்.அந்தவகையில் தற்பொழுது தரமற்ற கட்டிடத்தை கட்டிய இரண்டு பொறியாளர்களை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.