முகக்கவசம் கையுறை அணியாமல் வருபவர் மீது நடவடிக்கை – மதுரை உயர் நீதிமன்றம் தகவல்

0
123

கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது சில தளர்வுகள் உடன் அனைத்து துறைகளும் 50% இயங்கி வருகிறது. ஆனால் கொரோனா தொற்று முழுமையாக சரி செய்யப்படாத காரணத்தினால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் பலரும் அதை பற்றி எந்த ஒரு கலக்கமும் இன்றி எப்பொழுதும் போல் பொது இடங்களில் நடந்துகொள்கின்றனர். இந்த செயல்களை கண்டித்து மதுரை  உயர் நீதிமன்றம் பொது இடங்களுக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணியாமலும், கையுறை அணியாமலும் வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவலை வழங்கியுள்ளது.

பொது இடங்களுக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால் அவர்களிடம் அபராதமாக ரூபாய் 2000 வசூலித்தால் என்ன – என்று மதுரை உயர்நீதிமன்றம் ஆலோசித்து வருகிறது. அதுமட்டுமின்றி பொது இடங்களுக்கு வரும் மக்கள் முக கவசத்துடன் கை உரையும் அணிந்து வர வேண்டுமாம்.

மேலும் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காத நபர்களிடம் நடவடிக்கையாக கைது நடவடிக்கை கூட மேற்கொண்டால் என்ன – என்றும் ஆலோசித்து வருகிறது  மதுரை உயர் நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபுதுச்சேரியில் மேம்பாலம் திறப்பு! அமைச்சர் திறந்து வைத்தார்!
Next articleதமிழகத்தில் 10 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை! அக். 07 கொரோனா பாதிப்பு நிலவரம்!!